தலவாக்கலை - வட்டகொட பகுதியில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பயணித்த ஜேர்மன் நாட்டு பிரஜையிடமிருந்த மடிக்கணணி மற்றும் இரண்டு டிஜிட்டல் கமராக்கள் ஆகியவற்றை திருடிய குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கந்தானை பகுதியை சேர்ந்தவர் என்றும் அவருக்கு தலவாக்கலை பகுதியை சேர்ந்த சில இளைஞர்களும் உதவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு சம்பவமானது கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதோடு, திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர் நேற்று கைது செய்யப்பட்டு தலவாக்கலை பொலிஸாரால் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருடிய பொருட்களை ஜேர்மன் பிரஜையிடம் கையளித்துவிட்டதாகவும், தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஜேர்மன் பிரஜை இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதுவராலயத்தில் மேற்கொண்ட புகாரையடுத்தே, பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் கூறியமை குறிப்பிடதக்கது.