"இரு வாரங்களில், தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கூரைச் சூரியப் படல்கள்"

Published By: Robert

26 Jan, 2017 | 11:23 AM
image

இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநராகப் பணியாற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, உள்நாட்டில் கூரைகளின் மேல், மின் பிறப்பாக்கத்திற்காக பொருத்தப்பட்டுள்ள சூரியப் படல்களை, இரு வாரங்களுக்குள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்குமாறு, மின்சேவை வழங்குநர்களான இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி நிறுவனம்  ஆகியவற்றைப் பணித்துள்ளது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான தமித்த குமாரசிங்க “ மரபிற்குப் புறம்பான, புதுப்பிக்கக்கூடிய சக்தி மூல வளங்களில் மத்தியில், கூரைச் சூரியப் படல் தொழினுட்பமானது, மின்கட்டமைப்புடன் இணைத்தல் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றுக்கான அதி விரைவான தொழினுட்பம் ஆகும். அரசாங்கத்தின் “சூரிய பல சங்கிராமய” எனும் நிகழ்ச்சித்திட்டமானது, வருங்கால சக்தித் தேவையை கணிசமான அளவு தீர்க்கக் கூடிய சிறந்த திட்டம் ஆகும். மேலும், 2016ம் ஆண்டில் கூரைகளில் மின்பிறப்பிக்கப் பொருத்தப்பட்ட சூரியப்படல்கள் மூலம், இலங்கையானது 42 மெகா வற் கொள்ளளவை தேசிய மின்கட்டமைப்பிற்குச் சேர்த்துள்ளது.” என்று கூறினார்.

இலங்கையானது, எதிர்வரும் 2020ம் ஆண்டில் தேசிய மின்கட்டமைப்பிற்கு 200 ஆறு இணையும் 2025ம் ஆண்டு 1000 ஆறு இனையும் சேர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, கூரைச் சூரியப்படல் தொகுதிகளை மின்கட்டமைப்புடன் இரு வார கால அளவுக்குள் இணைக்க வேண்டும் என மின்சார வழங்குநர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

இலங்கையில் தொடர்ச்சியான மின்சார வழங்கலை உறுதிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள காலச் சட்டகத்தின் எல்லைக்குள், தேசிய மின்கட்டமைப்பில் இணைத்தல், நெட் மீட்டரிங், நெட் அக்கவுண்டிங் அல்லது நெட் பிளஸ் உடன்படிக்கைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என மின்சார வழங்குநர்கள் கோரப்பட்டுள்ளனர்.

நெட் மீட்டர் பொருத்துகைக்கான மதிப்பீட்டைத் தருவதற்கானதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான அதிகபட்ச கால அளவானது,  நெட் மீற்றரிங்க்கான நிரப்பப்பட்ட விண்ணப்பம் மற்றும் விண்ணப்பக் கட்டணத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரம் ஆகும்.

நெட் மீற்றர் பொருத்துகை மற்றும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டு மின்கட்டமைப்புடன் இணைத்தல் ஆகியவற்றுக்கானதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான அதிகபட்ச கால அளவானது,  நெட் மீற்றர் பொருத்துகைக்காக கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஒரு வாரம் ஆகும். 

2016 நவம்பர் வரையான தகவல்களின்படி இலங்கையில், கூரைச் சூரியப் படல் மின்னுற்பத்தி நிலையங்கள் 7904 பொருத்தப்பட்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டும் உள்ளன. தென்மாகாணத்தில் 256, மேல் மாகாணத்தில் 4806, மத்திய மாகாணத்தில் 184, சப்ரகமூவ மாகாணத்தில் 105, வட மேல் மாகாணத்தில் 249, வட மத்திய 98, வடமாகாணத்தில் 1707, ஊவா மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 73 ஆகிய எண்ணிக்கைகளில் இலங்கை முழுவதும்  கூரைச் சூரியப் படல் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

’சூரிய பல சங்கிராமய’ திட்டத்திற்கு முன், கூரைச் சூரியப் படல் மின்னுற்பத்தி நிலையங்கள்  இலங்கையில் 6485 மட்டுமே இருந்தன. நவம்பர் 2016 இறுதியில் இவை 7905 ஆக அதிகரித்துள்ளன. 1420 நிலையங்கள் ’சூரிய பல சங்கிராமய’ திட்டத்தால் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. தரவுகளின்படி, இலங்கையானது சூரிய சக்தியின் 40 கெகா வற் மணித்தியாலங்களை உற்பத்தி செய்துள்ளது.

புதுப்பிக்கக் கூடிய சக்தி மூல வளங்களின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்தலில், அரசாங்கம் மட்டுமன்றி தனியார் துறை முதலீட்டாளர்களும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இலங்கையில் தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 வீதம் புதுப்பிக்கக் கூடிய மூல வளங்களின் ஊடாகவே பிறப்பிக்கப் படுகின்றது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்த அளவை 60 வீதம் ஆக்குவதற்கும் 2030ம் ஆண்டில் இதை 70 வீதம் ஆக்குவதற்கும் அரச கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. 2050ம் ஆண்டில் இலங்கைக்குத் தேவைப்படும் மொத்த சக்தியும் புதுப்பிக்கக் கூடிய மூல வளங்கள் மற்றும் சுதேச சக்தி வளங்கள் ஆகியவை ஊடாகப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38