எமது அணி திறமையின்  மீது நம்பிக்கை வையுங்கள் : விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி: இலங்கையின் வெற்றிகுறித்து சங்கா,மஹேல

Published By: MD.Lucias

26 Jan, 2017 | 11:27 AM
image

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்வானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று இருபது20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை வீர்ர்களின் திறமை மற்றும் அணித் தலைமை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் இலங்கை அணியின் தலைமை பொறுப்பில் இருந்து ஏஞ்சலோ மெத்தியூஸ் விலகுவதற்கு இது சரியான தருணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தென்னாபிரிக்கவுக்கு எதிரான முதலாவது இருபது 20 போட்டியிலும் இலங்கை தோல்வியை தழுவியதையடுத்து அணியின் மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்தது விமர்சனங்கள் வலுப்பெற தொடங்கின.

எனினும் இரண்டாவது இருபது 20 போட்டியில் மெத்தியூஸின் அதிரடியுடன் இலங்கை திரில் வெற்றி பெற அனைவரின் கண்களும் இலங்கை அணி பக்கம் திரும்பியது.

இந்த போட்டியின் பின்னர் மெத்தியூஸ் மீதான  விமர்சனங்கள் குறைவடைந்ததோடு சொந்த தேவைக்காக மெத்தியூஸ் நாடு திரும்பினார்.

உங்கள் மீதான விமசர்னங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு இதைதவிர சரியான வழி எதுவும் இல்லை என இரண்டாவது போட்டியின் வெற்றியின் பின்னர் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன  தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான நேற்றைய போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் களமிறங்காமல் இருந்தமையால் இலங்கை அணியின் மீதான எதிர்பார்ப்பு சற்று குறைவாகவே காணப்பட்டது.

எனினும் நேற்றை போட்டியின் முடிவில் இலங்கை அணி தனது அபார திறமையை வெளிப்படுத்தி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மஹே ஜயவர்தன, இலங்கை அணி சிறப்பாக விளையாடி இருந்தது. குறிப்பாக நிரோசன் டிக்வெல மற்றும் சீக்குகே பிரசன்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அணியின் திறமை மீது அனைவரும் நம்பிக்கை வைத்து பொறுமையுடன் ஆதரவு வழங்க வேண்டும் என குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09