டுபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா இந்தியாவின் தேசியக் கொடியைப் போன்று வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டே இந்த அலங்கார விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று, இக்கட்டிடத்தை ஒட்டியதாக அமைந்துள்ள இசைக்கேற்ப நடனமாடும் நீர்த் தடாகத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘ஜெய் ஹோ’ என்ற பாடலும் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலும் இசைக்கப்பட்டன. 

அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் பலத்த கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இன்றும் இதே நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.