நாடு­க­டந்த தமி­ழீழம் என்ற பெயரில் சட்­ட­ரீ­தி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட எந்­த­வொரு கட்­ட­மைப்பும் உலகில் எந்­த­வொரு பகு­தி­யிலும் இல்லை என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சபையில் தெரி­வித்தார்.

உருத்­தி­ர­கு­மாரன் தலை­மை­யி­லான நாடு கடந்த தமி­ழீழம் எனத் தம்­மைத்­தாமே கூறிக்­கொள்ளும் குழு­வொன்று ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­ போல கனவு கண்டு வரு­கின்­றது எனவும்  அமைச்சர் மங்­கள சம­ர­வீர சுட்­டிக்­காட்­டினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் கூட்டு எதி­ரணி எம்.பி.யான உதய கம்­மன்­பில, உருத்­தி­ர­கு­மாரன் தலை­மையில் 135 உறுப்­பி­னர்­களைக் கொண்ட நாடு கடந்த தமி­ழீழம் என்ற சட்­ட­வாக்­க­ ச­பையும் பாரா­ளு­மன்­றமும் செயற்­பட்டு வரு­வது தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்­சுக்குத் தெரி­யுமா என கேள்­வி­யெ­ழுப்­பினார். 

அதற்குப் பதி­ல­ளிக்கும் போதே வெளி­வி­வ­கார அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தனது பதிலில் மேலும் தெரி­வித்­தா­வது,

சர்­வ­தேச ரீதி­யாக வியா­பித்­துள்ள தமிழீழ அரசாங்கம் என அழைக்­கப்­படும் அர­சாங்கம் எதுவும் இல்லை. எனினும் நாடு கடந்த தமி­ழீழம் என தம்­மைத்­தாமே அழைத்துக் கொள்ளும் நபர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இவர்­களை எந்­த­வொரு உலக நாடு­களோ, ஐக்­கிய நாடுகள் சபையோ, சர்­வ­தேச அமைப்­புக்­களோ சட்­ட­ரீ­தி­யாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. 

கூட்டு எதிர்க்­கட்சி எனக் கூறிக்கொள்ளும் நீங்கள் எந்­த­வொரு சட்­ட­ரீ­தி­யான ஏற்­றுக்­கொள்­ளலும் இல்­லாமல் சுதந்­தி­ர­மாக செயற்­பட்டு வரு­வ­தைப்­போன்று உருத்­தி­ர­கு­மாரன் தலை­மையில் குழு­வொன்று செயற்­பட்டு வரு­கி­றது. கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் நிழல் அமைச்­சுக்­களை நிய­மித்து செயற்­ப­டு­வ­து­போன்று  அவர்­களும் செயற்­ப­டு­கி­றார்கள். எனினும் சட்­ட­ரீ­தி­யாக அவர்­களை எவரும் ஏற்றுக் கொள்­ள­வில்லை.

விடு­தலைப் புலிகள் அமைப்பை முத லில் தடை­செய்த நாடு அமெ­ரிக்­கா­வாகும்.  எனவே அங்கு புலி அமைப்­புக்கோ அல்­லது அதற்கு ஆத­ர­வான அமைப்­புக்கோ சட்­ட­ரீ­தி­யான அனு­மதி எதுவும் வழங்­கப்­ப­டாது. நாடு கடந்த தமி­ழீழம் என்ற பெயரில் எந்­த­வொரு நிறு­வ­னமோ அல்­லது நாடோ உலகில் எந்­த­வொரு பகு­தி­யிலும் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை 

அதே­நேரம், அவுஸ்­தி­ரே­லிய புள்­ளி­வி­ப­ர­வியல் பணி­யகம் 'தமிழ் ஈழம்’ என்­பதை அதன் இணை­யத்­த­ளத்தில் ஓர் வகைப்­ப­டுத்­தப்­பட்ட நாடாக பட்­டி­யற்­ப­டுத்­தி­யது. அது தொடர்பில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் அந்­நாட்டு அர­சாங்­கத்தின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்­தது. மறு­நாளே அந்த வசனம் நீக்­கப்­பட்­டது. தமி­ழீழம் என்­பதை ஓர் நாடாக எப்­போதும் அங்­கீ­க­ரிக்­கப்­போ­வ­தில்­லை­யென அவுஸ்­தி­ரே­லியா எழுத்­து­மூலம் அறி­வித்­தது. இலங்­கையின் இறைமை மற்றும் ஆட்­புல ஒரு­மைப்­பாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு விட­யத்­தையும் தொகை­ம­திப்பில் உள்­ள­டக்­கப்­போ­வ­தில்­லை­யென அவுஸ்­தி­ரே­லியா உறு­தி­ய­ளித்­துள்­ளது.

டென்மார்க் குடி­வ­ரவு சேவை இணை­யத்­த­ளத்தில் டென்­மார்க்கின் விசா பெறும் தகு­தி­யு­டைய நாடாக தமிழ் ஈழம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது குறித்து அந்­நாட்டு அர­சுக்கு எடுத்துக் கூறப்­பட்­டதைத் தொடர்ந்து பிழை நிவர்த்தி செய்­யப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி டென்மார்க் அர­சாங்கம் தவ­றுக்கு மன்னிப்பும் கோரியிருந்தது.

அரசாங்கம் தொடர்ச்சியாக விழிப்புடன் இருக்கிறது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட தடைசெய்யப்பட்ட நபர்கள் தொகுதிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் இயக்கமும் உள்ளது. இது தொடர்பில் அரசு விழிப்புடன் இருக்கிறது என்றார்.