அமெரிக்க மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பிரபல பாடகியும், நடிகையுமான லின்ட்சே லொஹான் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களின் அவர் கடந்த காலங்களில் பதிவிட்ட பதிவுகளை அனைத்தையும் அழித்துள்ள லின்ட்சே லொஹான் இன்ஸ்டகிராம் பக்கத்தில்  ‘அலைக்கும் ஸலாம்” என்று மாத்திரம் பதிவு செய்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த லின்ட்சே லொஹான் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். லின்ட்சேவுக்கு தற்போது 30 வயது பூர்த்தியாகியுள்ள நிலையில், லண்டனில் வைத்து சவூதி அரேபியாவை சேர்ந்த சில நண்பர்கள் புனித குர்ஆன் பிரதியொன்றை தனக்கு அன்பளிப்பு செய்ததாகவும், குர்ஆனை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து தன்னுள் பல மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்ததாகவும் துருக்கிய ஊடகங்களுக்கு லின்ட்சே லொஹான் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.