கச்சத்தீவில் இந்தியக் கொடி! அர்ஜூன் சம்பத் அச்சுறுத்தல்!

Published By: Devika

26 Jan, 2017 | 09:09 AM
image

இலங்கை வசமுள்ள கச்சை தீவில் பலவந்தமாக இன்று (26) இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாக இந்தியாவின் இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றை கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம் கையளித்தார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டது இந்திய அரசு. இதன்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியர்களுக்கு உரிமை இருந்த போதிலும் இந்திய மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை அரசு தடை விதித்து வருகிறது. மேலும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாடு நடத்தவும் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 

கச்சத்தீவை மீட்க மாநில, மத்திய அரசுகளிடம் பல முறை கோரிக்கைகள் விடுத்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, குடியரசு தினமான நாளை (இன்று - 26) கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்கும் விதமாக அங்கு இந்திய சுதந்திரக் கொடி பறக்கவிடப்படவேண்டும். இல்லாவிட்டால், இந்து மக்கள் கட்சியின் சார்பில் எமது தொண்டர்கள் அங்கு இந்தியக் கொடியை ஏற்றுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01