சீனாவில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த காரில் தன்னுடைய விலை உயரந்த கைப்பையை எடுப்பதற்கு இளம் பெண் ஒருவர் குறித்த காரின் உள்ளே செல்ல முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் டாக்கிங் என்ற நகரத்தில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய காரை நிறுத்திச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று காரின் பெற்றோல் தாங்கியிலிருந்து தீப்பற்றியுள்ளது.

குறித்த கார் முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கிய நிலையில் இதைக் கண்ட அப்பெண் திடீரென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த காரில் தன்னுடைய விலையுர்ந்த கைப்பையினை எடுப்பதற்காக காரின் கதவை திறந்து உள்ளே செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும், அங்கிருந்த நபர் ஒருவர்  குறித்த பெண்ணை தடுத்து காரின் அருகே செல்ல விடாமல் தடுத்து வைத்துள்ளார்.

மேலும் குறித்த பெண் தீயில் ஏற்பட்ட சிறு காயங்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்,குறித்த பெண் மதுபோதையில் தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பெண் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்திருந்தமை உறுதி செய்யப்பட்டால் அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை இழக்க நேரிடும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.