நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை உரிய வகையில் சந்தைக்கு அனுப்பாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

குறித்த உப குழு சிறப்பு செயற்திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் சரத் அமுனுகமவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.