கல்கிஸை கடலில் நீராடச் சென்ற  இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துடன் ஹட்டன் - லிந்துலை பிரதேத்தை சேர்ந்த 18 வயதான இளைஞனும் கொழும்பு – ஜம்பட்டா வீதியை சேர்ந்த 21 வயதான இளைஞனுமே இவ்வாறு காணமல் போயுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.