இரண்டு இணைபிரியாத நாய்கள் தங்களுக்குள் மரக்கிளை துண்டொன்றை மாறிமாறி பிடுங்கி விளையாடிய நிலையில்,  நீரில் அடித்து செல்லப்பட்ட தனது நட்பு நாயை, மறுமுனையிலிருந்த நாயொன்று மிக சூட்சுமமாக காப்பாற்றிய சம்பவத்துடனான காணொளி ஆர்ஜெண்டினாவில் வெளியாகியுள்ளது.

ஆர்ஜெண்டினாவின் கோர்டோபா எனுமிடத்திலேயே மேற்கண்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள ஆற்றில், இரண்டு நாய்களும் ஒரு மரக்கிளை துண்டொன்றை பிடித்து விளையாடிய நிலையில், ஒரு நாய் ஆற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விழவே, மறுமுனையில் நின்ற நாய், நீரில் அடித்து வந்த நாயை லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளது.

மேலும் தங்கள் விளையாடுவதற்காக பயன்படுத்திய மரக்கிளை துண்டை நீரில் சென்ற நாய், கவ்விய நிலையில் இருந்ததாலேயே மறுமுனையில் இருந்த நாயிற்கு காப்பாற்ற வழியேற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.