இலங்கை கடற்­ப­ரப்­பிற்குள் அத்­து­மீறி பிர­வே­சித்து கடற்­றொ­ழிலில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட 29 இந்­திய மீன­வர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரு­கோ­ண­மலை - நாயாறு பகு­தி­யி­லி­ருந்து 7 கடல் மைல் தொலைவில்  கைது செய்­யப்­பட்­டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.