நவீன உத்திகள் மூலம் பத்தே நொடிகளில் தரைமட்டமான பத்தொன்பது கட்டிடங்கள் (காணொளி)

Published By: Devika

25 Jan, 2017 | 03:50 PM
image

சீனாவில், புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக கண் இமைக்கும் நேரத்தில் 19 கட்டிடங்கள் தரைமட்டமான காணொளி வெளியாகியுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் சுமார் 700 மீற்றர் உயரமுள்ள புதிய வர்த்தகக் கேந்திரம் ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கிணங்க, சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடி பரப்புக் கொண்ட வளாகத்தில், 12 மாடிகளைக் கொண்ட பத்தொன்பது கட்டிடங்கள் பத்தே நொடிகளில் தரைமட்டமாயின. கண்ணாடி, இரும்பு, கொங்கிரீட் உட்பட அனைத்தும் தூள் தூளானது.

மொத்தமாக ஐந்து தொன்கள் எடையுள்ள வெடிமருந்து கட்டிடங்களின் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இடங்களில் பிரித்து வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது. எனினும், இதன்போது அப்பகுதியில் உள்ள ஏனைய கட்டிடங்களுக்கோ, வீதிகளுக்கோ எந்தவிதத் தொந்தரவும் இருக்கவில்லை என்பதுதான் வியப்புக்குரியது.

இதற்காக, கட்டிட தகர்ப்பு வேலைகளைப் பொறுப்பேற்ற நிறுவனம் ஒரு வார காலமாகத் திட்டமிட்டு வெடிபொருட்களை வைப்பதற்கான இடங்களைத் தெரிவுசெய்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right