கிளிநொச்சி கட்டை பகுதியில் சற்றுமுன் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதமும்  புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளத்தாகவும் விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் உடனே பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக  அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.