ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் சிலர் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து கடிதமொன்றை வழங்கியுள்ளனர்.

வைத்திய தேவைக்காக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் இராணு வீரர்களுக்கான ஓய்வூதியத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலான கடிதமொன்றையே இவர்கள் வழங்கி வைத்துள்ளனர்.

இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறு ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.