பத்து இலட்சம் பனை மரங்களை நடும் பங்களாதேஷ்: மின்னலில் இருந்து தப்பிக்க வித்தியாசமான முயற்சி

Published By: Devika

25 Jan, 2017 | 12:15 PM
image

ஆண்டு தோறும் மின்னல் தாக்கி நூற்றுக்கணக்கான பங்களாதேஷ் வாசிகள் பலியாகி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் அந்நாட்டரசு பத்து இலட்சம் பனை மரங்களை நடும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் பங்களாதேஷில் மின்னல் தாக்கி 200 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக, மே மாதத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கத்திற்கு 82 பேர் பலியாகினர். எனினும், தொலைதூரக் கிராமங்களில் மின்னல்களுக்கு பலியாவோர் குறித்து தகவல்கள் அறிவிக்கப்படாது என்பதால் கடந்த ஆண்டில் சுமார் 350 பேர் மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த மரணங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து ஆராய்ந்த அரசு அதிகாரிகள், மரங்கள் குறைவாக இருப்பதாலேயே இதுபோன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதைக் கண்டறிந்தனர். இதையடுத்து நாடெங்கும் பத்து இலட்சம் பனை மரங்களை நடத் தீர்மானித்துள்ளனர். 

தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டம், எதிர்வரும் ஜூன் மாதமளவில் பூர்த்தியாகும் என்றும் அதன் பின்னர் இரண்டாவது கட்டமாக மேலும் பல இலட்சம் மரங்கள் நாடெங்கும் நடப்படும் என்றும் அவ்வதிகாரிகள் கூறினர்.

தாய்லாந்திலும் இதே திட்டத்தின் மூலம் மின்னலுக்கு பலியாவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பனை மரங்கள் வளர்வதற்கு அதிக காலம் எடுக்கும் என்றாலும், அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சி வரவேற்கத் தக்கதே என்று பங்களாதேஷ் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52