கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் வழங்க வேண்டும் : வட மாகாண சுகாதார அமைச்சர்

Published By: Priyatharshan

25 Jan, 2017 | 11:28 AM
image

இந்த நாட்டில் நடைபெற்று முடிந்த உள்நாட்டுப் போரின் போது பல சந்தர்ப்பங்களிலும் ஏராளமானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் உண்மை நிலைமை தொடர்பில் அவர்களது உறவினர்களுக்கு பதில் வழங்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. இந்த விடயத்திலிருந்து அரசாங்கம் எளிதில் விலகிவிடமுடியாதென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்று முன்தினம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பலகட்டங்களிலும் பெருமளவிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்களும் சரி போராட்டத்தில் எந்தவித ஈடுபாடுகளும் கொண்டிராதவர்களும் பலவந்தமாக காணமல் செய்யப்பட்டுள்ளனர்.

உலக சட்டங்களை மீறி பல்வேறு தரப்பினரால் இவர்கள் பல  சந்தர்ப்பங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து அவர்கள் தப்பி விடமுடியாது.

குறிப்பாக 2009 இறுதி யுத்தத்தின்போது அரச படைகளின் வேண்டுகோளிற்கமைய அப்போதைய அரசாங்கத்தை நம்பி தங்கள் உறவுகளை ஒப்படைத்தனர்.

ஆனாலும் இன்றுவரை பலர் உறவினர்களிடம் மீளஒப்படைக்கப்படவில்லை. எனவே அரசாங்கமானது ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய விசாரணை நடாத்தி உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கவேண்டும்.

தமது உறவுகளை தொலைத்த நாளிலிருந்த இன்றுவரை அவர்கள் மீண்டுவருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தேடி அலைந்து வருகிறார்கள். எத்தனை போராட்டங்கள், எத்தனை சந்திப்புகள், எத்தனை வாக்குறுதிகள் அனைத்துமே அவர்களின் கேள்விக்கான பதிலை இன்று வரை வழங்கவில்லை.

இதனால் நம்பிக்கை இழந்தே இவர்கள் இன்று தாமாக முன்வந்து தங்கள் உயிரினையும் துச்சமெனமதித்து சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். இனியும் வேண்டாம் தாமதம் உரிய பதிலை அரசாங்கம் உடனடியாக வழங்கவேண்டுமென அந்த செய்திக்குறிப்பில் மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18