அமெ­ரிக்க புதிய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், டிரான்ஸ் – பசுபிக் பங்­கா­ளித்­துவ  உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து  வாபஸ் பெறு­வ­தற்­கான நிறை­வேற்று ஆணையில் கைச்­சாத்­திட்டு அது தொடர்பில் தேர்தல் பிர­சா­ரத்தின் போது  தன்னால் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தியை பூர்த்தி செய்­துள்ளார்.

அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா,  புரூனே, கனடா, சிலி, ஜப்பான், மலே­சியா, மெக்­ஸிக்கோ, நியூ­ஸி­லாந்து, பெரு, சிங்­கப்பூர், வியட் நாம்  ஆகிய 12  நாடு­க­ளுக்­கி­டை­யி­லான  மேற்­படி வர்த்­தக உடன்­ப­டிக்­கை­யா­னது  அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் ஆசிய கொள்­கைகள் தொடர்­பான அச்­சா­ணி­யாக இருந்து வந்­தது.

மேற்­படி  உடன்­ப­டிக்­கையை இரத்துச் செய்­த­தை­ய­டுத்து டொனால்ட் ட்ரம்ப் தெரி­விக்­கையில்,  இது அமெ­ரிக்கப் பணி­யா­ளர்­க­ளுக்­கான  மாபெரும் ஒரு விடயம் எனக் கூறினார்.

அத்­துடன் அவர் கருக்­க­லைப்பு சேவை­களை வழங்கும் சர்­வ­தேச குழுக்­க­ளுக்­கான  நிதி­யிலும் துண்­டிப்பை மேற்­கொண்டார்.

டிரான்ஸ் – பசுபிக் பங்­கா­ளித்­துவ  உடன்­ப­டிக்கை தொடர்­பான டொனால்ட் ட்ரம் பின் மேற்­படி நிறை­வேற்­ற­தி­கார ஆணை­யா­னது, அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­க­ளிலும் அது தொடர்­பான தீர்­மானம் இது­வரை நிறை­வேற்­றப்­ப­டா­துள்ள நிலையில் அடை­யாள ரீதி­யான ஒன்­றா­கவே பெரு­ம­ள­வுக்கு நோக்­கப்­ப­டு­கி­றது.

டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளின் போது அந்த உடன்­ப­டிக்கை அமெ­ரிக்க உள்­நாட்டுப் பொரு­ளா­தா­ரத்­துக்கு பாரிய அனர்த்­த­மா­க­வுள்­ள­தா­கவும் அது அமெ­ரிக்க உற்­பத்­திக்கு தீங்கு விளை­விக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

டிரான்ஸ் – பசுபிக் பங்­கா­ளித்­துவ  உடன்­ப­டிக்­கை­யா­னது உலக பொரு­ளா­தா­ரத்தில் 40 சத­வீ­தத்தை உள்வாங்கி செயற்படுகின் றமை குறிப்பிடத்தக்கது.

அந்த உடன்படிக்கை பலமான பொரு ளாதார உறவுகள்,  வளர்ச்சியை ஊக்கு வித்தல் மற்றும் சுங்க வரியை குறைத்தல் என்பற்றை இலக்காகக் கொண்டுள்ளது.