மைக்ரோசொஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ‘ட்ரில்லியனர்’ - அதாவது, ஒரு இலட்சம் கோடி (1,000,000,000,000) டொலர்களுக்குச் சொந்தக்காரர் என்ற அந்தஸ்தை மிக விரைவில் அடையவிருக்கிறார். ஒஃக்ஸ்பாம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் நடத்தியுள்ள ஆய்விலிருந்தே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், உலகில் 2016ஆம் ஆண்டுக்குப் பின் புதிதாக ஒரு ‘பில்லியனர்’ உருவாவதற்கு இன்னும் சுமார் 25 ஆண்டு காலம் ஆகும் என்றும், அப்போது பில் கேட்ஸ் 86 வயதை எட்டியிருப்பார் என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தில் இருந்து பில் கேட்ஸ் விலகிவிட்டார். அப்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 50 பில்லியன், அதாவது ஐம்பதாயிரம் கோடி டொலர்களாக இருந்தது. எனினும், அவரது தனிப்பட்ட முதலீடுகள் மற்றும் அவரது இன்னோரன்ன தொழில்கள் மூலம் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பில் கேட்ஸின் வருமானம் ஆண்டுக்குச் சுமார் 11 சதவீதம் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் 75 பில்லியனாக இருந்தது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டு நிறைவுக்குள் அவரது மொத்த சொத்தின் மதிப்பு சுமார் 100 பில்லியன் - அதாவது, ஒரு இலட்சம் கோடி டொலரை நெருங்கிவிடும் என்று தெரிகிறது. இதன்மூலம், உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற அந்தஸ்தையும் பில் கேட்ஸ் பெறவிருக்கிறார்.

இதில் சுவாரசியமான முரண் என்னவென்றால், தான் ஆரம்பித்த மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அறக்கட்டளை நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி டொலர்களை பில் கேட்ஸ் செலவிட்டும் கூட அவரது வருமானம் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதே!

இதுவரையில்‘ட்ரில்லியனர்’ என்ற நிலையை உலகில் எவரும் அடையாததால், இந்த வார்த்தை இதுவரை அகராதிகளில் சேர்க்கப்படவே இல்லை. எனினும் எதிர்வரும் காலங்களில் இந்த வார்த்தை அகராதியில் சேர்க்கப்படலாம் என அந்த ஆய்வு விமர்சித்துள்ளது.