புத்தல பகுதியில் போலி 500 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புத்தல பகுதியில் சந்தேகத்திடமான ட்ரக் வண்டியொன்றினை  பொலிஸார் சோதனைக்குற்படுத்திய போது குறித்த வாகனத்திலிருந்து 506 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் புத்தல பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் சில விசேடமான காகிதங்களை கொண்டு போலி நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்

இதேவேளை போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய கணினி, அச்சு இயந்திரம் மற்றும் உபகரணங்கள் சிலவற்றையும் கைப்பறியுள்ளனர்.