துணிச்சலான அண்டார்டிகா பயணம்  : உலக சாதனையுடன் அவுஸ்திரேலிய பெண் 

Published By: Selva Loges

25 Jan, 2017 | 10:43 AM
image

அவுஸ்திரேலிய பெண் ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல், ஆபத்தான அண்டார்டிகா துருவத்தை 100 நாட்களில்  அடைந்து உலக சாதனை படைத்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதான லிசா பிலேயர் எனும் பெண்னே குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கப்பல் ஒன்றில் மாலுமியாக பனியாற்றும் அவர் சவால் மிகு தனி கடல் பயணங்களில் மிகுந்த ஆர்வம் மிகுந்தவராவார். இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்திற்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுத்து, தனது பயணத்திற்கென தனியான படகு ஒன்றைஉருவாக்கியுள்ளார்.

பாரிய அலை வீச்சை கொண்ட அண்டார்டிகா பெருங்கடலில் சுமார் 3000 கீலோமீற்றர் தூரத்தை 100 நாட்களில் கடந்து, அண்டார்டிகா கண்டத்தை அடைந்துள்ளார்.

இது பற்றி லிசா  குறிப்பிட்டுள்ளதாவது, நன்கு பயிற்சி எடுத்ததாலும், மன உறுதியுடன் செயல்பட்டதாலுமே குறித்த சாதனையை தன்னால் செய்ய முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

100 நாட்களில் குறித்த பயணத்தை மேற்கொண்ட லிசா பிலேயர், உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். இதற்கு முன்னதாக  ஒருவர் 102 நாட்களில் பயணம் செய்ததே உலக சாதனையாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right