மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிற்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித வள பணியாளர்கள் 37 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நீதிமன்றம் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தவை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.