கொள்ளையர்களால் 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை ; சந்தேக நபர்கள் பொலிஸாரினால் மடக்கிப் பிடிப்பு ; ஊர்காவற்றுறையில் சம்பவம்

Published By: Priyatharshan

24 Jan, 2017 | 05:05 PM
image

(ரி. விரூஷன்)

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களார் அடித்து, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட முயன்றவேளை, கொள்ளையர்களுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதலில் பெண் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அங்கிருந்து கொள்ளையர்கள் தமது அடையாளம் எதுவும் பொலிஸாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக இரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் தாலிக்கொடியையும் அபகரித்து தப்பிச்சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் அயல் வீட்டார் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சாதுரியமாக செயல்பட்டு சந்தேக நபர்கள் இருவரை மண்டைதீவு சந்தியில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 34 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணாவார். இந்நிலையில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளது. 

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலைதோன்றியுள்ளதாகவும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் செய்தியார் தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்திற்கு முன்னாள் பொதுமக்கள் திரண்டுள்ளதால் தற்போதும் அங்கு பதற்றநிலை நிலவிவருகின்றது.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முயன்றபோதே பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

எனினும் குறித்த் சந்தேக நபர்களை பொலிஸார் யாழ்ப்பாணத்திறகு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

இதேவேளை, வெளியிடத்தில் இருந்து இரும்பு வியாபாரத்திற்காக அங்கு வந்த நபர்களே இவ்வாறு குற்றம்புரிந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47