மணிக்கு 120 கி.மீ. வேகம்: வேலையின் முதல் நாளே விபத்தில் சிக்கி உயிரிழந்த வாகனச் சாரதி

Published By: Devika

24 Jan, 2017 | 03:22 PM
image

மணிக்கு சுமார் 120 கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற பி.எம்.டபிள்யு. கார் ஒன்று ஊபர் வாடகைக் கார் மீது மோதியதில், வாடகைக் காரை ஓட்டிச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிறன்று இரவு டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

சொஹைப் கோலி (24) என்பவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அதிகாரி. இவர் கடந்த ஞாயிறன்று இரவு தனது பி.எம்.டபிள்யூ. ரகக் காரில் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தார்.

டெல்லியின் மையப் பகுதியில் கோலி சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த ஊபர் வாடகைக் கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கியெறியப்பட்ட கார் சில அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பின்பே நின்றது. மோதிய வேகத்திலேயே, குறித்த வாடகைக் காரைச் செலுத்திச் சென்ற நஸ்ருல் இஸ்லாம் (30) என்பவர் உடல் நசுங்கி பலியானார்.

நஸ்ருலின் வருமானத்தை நம்பியே அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் தனது வேலையை இழந்த இவர், ஊபர் நிறுவனத்தில் சம்பவ தினத்தன்று காலையே வேலைக்குச் சேர்ந்திருந்தார்.

விபத்தையடுத்து கோலி தப்பிச் சென்றபோதும், நேற்று தனது தந்தையுடன் பொலிஸில் ஆஜரானார்.

கோலியின் மீதான பொலிஸ் விசாரணையின்போது, மது அருந்திவிட்டு வாகனத்தைச் செலுத்தவில்லை என்று கூறிய கோலி அதீத வேகத்தில் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், முன்னால் சென்ற கார் திடீரென்று நிறுத்தப்பட்டதனாலேயே விபத்து சம்பவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47