புதிய வருடத்திலாவது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வேண்டும் : அனுரகுமார திசாநாயக்க

Published By: Priyatharshan

02 Jan, 2016 | 09:29 AM
image

ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி ஓராண்டு நிறைவை அர­சாங்கம் கொண்­டா­ட­வுள்­ளது. ஆனால், வடக்கு கிழக்கில் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்­களை எதிர்­பார்த்து காத்­தி­ருக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

இந்த ஆண்­டி­லா­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் அர­சியல் நகர்­வுகள் அமைய வேண்டும். மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் இந்த ஆண்டு முடி­வுக்குள் நிறை­வேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த ஆண்டில் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற வாக்­கு­று­தி­யை அர­சாங்கம் கொடுத்­துள்ள நிலையில் அது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

மிக நீண்ட கால­மாக நாட்டில் நிலவும் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்ற கோரிக்கை பல கால­மாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இத்­தனை கால­மாக ஆட்சி செய்த கட்­சி­களும் தமது ஆட்­சியை தக்­க­வைக்க வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்­றி­னவேதவிர இது­வ­ரையில் நாட்டை பலப்­ப­டுத்தும் தீர்வு ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்டும் என சிந்­திக்­க­வில்லை.

யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் தமிழ் சிங்­கள உறவு பலப்­படும்இ நாட்டில் நல்­லாட்­சிக்­கான கதவு திறக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்­தியில் இருந்­தது. எனினும் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நாட்டில் இன­வா­தமும்இ பிரி­வி­னை­வா­தமும் மட்­டுமே தலை­தூக்கி நாட்டை குழப்­பத்­திற்குள் தள்­ளி­யி­ருந்­தது.

யுத்­தத்தின் பின்னர் சொந்த இடங்­க­ளையும், வீடு­க­ளையும், உற­வு­க­ளையும் இழந்த மக்கள் ஒவ்­வொரு ஆண்டும் தமது விடிவை எதிர்­பார்த்து இருந்­த­போ­திலும் அவர்­க­ளுக்கு எந்த நன்­மை­களும் கிட்­ட­வில்லை. அவ்­வா­றான நிலையில் கடந்த ஆண்டு மிக­முக்­கி­ய­மான ஆண்­டாக கரு­தப்­பட்­டது.

அதா­வது ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்ட போது ஜன­நா­ய­கத்தை விரும்பி மக்கள் மாற்­றத்தின் பக்கம் நின்­றனர். அதேபோல் வடக்கு கிழக்கு மக்கள் தமது விடு­த­லையை எதிர்­பார்த்து நல்­லாட்சி அர­சாங்­கத்தை முழு­மை­யாக ஆத­ரித்­தனர்.

எனினும் மக்கள் எதிர்­பார்த்த மாற்றம் இன்­று­வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை. தமிழ் மக்­க­ளுக்கு நிரந்­தர தீர்வு கிடைக்கும் என்ற வாக்­கு­று­தி­களை இந்த அர­சாங்கம் நிறை­வேற்­றவும் இல்லை. தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சினை தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தாக கூறி ஒரு வருடம் பூர்த்தி ஆகி­யுள்­ளது.

இன்னும் ஒரு சில நாட்­களில் அர­சாங்கம் தனது ஒரு வருட பூர்த்­தியை கொண்­டா­ட­வுள்­ளது. ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி ஒரு ஆண்டு நிறைவை அர­சாங்கம் கொண்­டாடும் அதே வேளையில் வடக்கு கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்­களை எதிர்­பார்த்து காத்­தி­ருக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் இம்­முறை பொங்கல் விழா­வையும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வடக்கில் கொண்­டா­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். இவ்­வாறு விழாக்­களை கொண்­டா­டாது அந்த மக்கள் இனி­வரும் காலங்­களில் அமை­தி­யா­கவும் அச்­ச­மின்­றியும் புது­வ­ரு­டத்­தையும், எனைய நிகழ்­வு­க­ளையும் கொண்­டாடும் நிலை­மையை உரு­வாக்கும் வகையில் இந்த அர­சாங்கம் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும்.

அதேபோல் நாட்டில் மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்கி அதன் மூலம் நாட்டை பலப்­ப­டுத்த வேண்டும். ஆகவே பிறந்­தி­ருக்கும் இந்த ஆண்­டி­லா­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகை­யி­லான செயற்­பா­டுகள் அமைய வேண்டும்.

அர­சாங்கம் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை இந்த ஆண்டு முடிவுக்குள் நிறைவேற்ற வேண்டும். முன்னைய ஆட்சியில் மக்களை ஏமாற்றியதைப் போல இந்த ஆட்சியிலும் மக்கள் ஏமாற்றப்படக்கூடாது.

அதேபோல் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தமது முரண்பாடுகளை மறந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் வகையிலும்இ ஒற்றுமையை பலப்படுத்தும் வகையிலும் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47