சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று அருகிலிருந்த தூணொன்றுடன் மோதியதில் வீதியின் அருகில் நடந்து சென்ற பாதசாரியொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு - 14 கிராண்பாஸ் பகுதியில் அமைந்துள்ள வீரகேசரியின் தலைமைக் காரியாலயத்திற்கருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீதியில் பயணித்த மேலும் 3 முச்சக்கர வண்டிகளுக்கு சேதமேற்பட்டுள்ளதுடன் ஒரு முச்சக்கர வண்டி தூக்கி வீசப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த நபர் தனது மதிய உணவை முடித்துவிட்டு வீதியின் அருகில் நடந்து சென்றுகொண்டிருக்கையிலேயே பின்னால் வந்த கார் மோதியுள்ளது. இதில் 45 வயது மதிக்கத்தக்க நபரே காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.