‘மிகச் சிறந்த சேவை 2016’ விருதுடன் Daimler இன் உயரிய பாராட்டை சம்பாதித்துள்ள DIMO

Published By: Priyatharshan

24 Jan, 2017 | 01:05 PM
image

வியட்னாம் Mercedes-Benz மற்றும் Daimler AG ஆகியன ஒன்றிணைந்து தமது வருடாந்த Mercedes-Benz மிகச் சிறந்த சேவைக்கான விருது (SEAward) மாநாட்டை வியட்னாமின் ஹோஷி மின் (Ho Chi Minh) மாநகரில் 2016 டிசம்பரில் நடாத்தியிருந்தன.

SEAward ஆனது 2005 ஆம் ஆண்டில் Daimler AG இனால் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் தற்போது இந்த பெருமதிப்பை தமதாக்கிக் கொள்வதற்காக இலங்கை உட்பட தென்கிழக்காசிய வலயத்தைச் சார்ந்த 85 இற்கும் மேற்பட்ட Mercedes-Benz முகவர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம், புரூணை, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த Mercedes-Benz விற்பனைக்குப் பிந்திய சேவைகளுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரிகளை ஒன்றுகூட்டி, பங்குபற்றும் நாடுகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சேவை மட்டங்கள் தொடர்பான திருப்தியை அதிகரிக்கும் நோக்குடன் SEAward எனப்படுகின்ற ஊக்குவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

வருடாந்த SEAward முடிவுகளை அறிவிப்பதற்குப் புறம்பாக வியட்னாமின் ஹோஷ மின் நகரில் ஒரு நாள் மாநாடு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. DIMO நிறுவனத்தின் பிரயாணத்தேவை வாகனங்கள் பிரிவின் சேவைகளுக்கான பொது முகாமையாளரான தரங்க குணவர்த்தன இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.

வாடிக்கையாளர் திருப்தி மட்டத்தை அதிகரித்தல் மிகச் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மட்டப் புள்ளிகள் தொடர்பான Daimler இன் ஏனைய பல்வேறுபட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பான பல்வேறு முக்கிய செயற்பாடுகளும் இதில் அடங்கியிருந்தன.

Mercedes-Benz மோட்டார் கார்களின் வெளிநாடுகளுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறை தலைமை அதிகாரியும் தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களுக்கான விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்கான தலைமை அதிகாரியுமான வேர்னர் ஸ்கிமிட் நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து முகவர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் வெளிப்படுத்தினார்.

மூன்று முனை நட்சத்திர இலச்சினையின் நன்மதிப்பைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாத்து அதிசிறந்த சேவையை வழங்குவதை உறுதிசெய்த அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களது விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடனான உழைப்பிற்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் பிராந்தியத்தில் Mercedes-Benz இன் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் வாடிக்கையாளர் உறவுமுறை நிகழ்ச்சித்திட்டங்களின் அடிப்படையில் விற்பனை, விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான மேம்பாடுகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில ஆண்டுகளைப் பொறுத்தவரையில், விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றில் பன்மடங்கு வளர்ச்சியை Mercedes-Benz பதிவாக்கியுள்ளதுடன் குறிப்பாக, 2016 ஆம் ஆண்டானது இந்த வர்த்தகநாமத்தைப் பொறுத்தவரையில் மகத்தான ஒரு ஆண்டாக அமையப்பெற்றது.

இந்த வாகன உற்பபத்தியாளரின் 130 இற்கும் மேற்பட்ட ஆண்டு கால வரலாற்றில்ரூபவ் முதற்தடவையாக உலகளாவிய வாகன விற்பனை, 2.08 மில்லியனை எட்டியுள்ளதுடன் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக சாதனைமிக்க விற்பனைப் பெறுபேற்றை ஈடேற்றேவும் வழிகோலியுள்ளது.

ஆசிய நாடுகளுக்கான தமது முகவர் நிறுவனங்கள் விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவையில் வகித்துவருகின்ற சிறப்பான பங்களிப்பை இனங்கண்டு, பாராட்டும் வகையில் SEAward விருது அறிமுகம் செய்யப்பட்டதுடன் பேணற் சேவை மையங்களின் தொழிற்பாட்டுத்திறன் இதன் மூலமாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கான சேவையை சிறப்பாக மாற்றியமைப்பதை ஊக்குவிக்கும் ஒரு காரணியாகவும் இது அமைந்துள்ளது. விற்பனைக்குப் பின்னரான வாடிக்கையாளர் திருப்தி மட்ட புள்ளி (CSI), Net Promoter புள்ளி (NPS), மேற்கொண்ட திருத்த வேலைகளின் துல்லியம் பேணற்சேவை மையத்தின் தோற்றம் முகவர் மைய பணியாளர்களின் கனிவான பண்பு, பேணற்சேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளுக்கான கட்டணங்கள் நியாயமான முறையில் அறிவிடப்படுதல் போன்றவற்றின் அடிப்படையில் வெற்றிபெறும் முகவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58