பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போடடியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி  289 ஓட்டங்களையும், நியுஸிலாந்து அணி 354 ஓட்டங்களையும் பெற்றன.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில்  மஹமதுல்ல 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 109 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுஸிலந்து அணி ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 111 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

நியுஸிலாந்து அணி சார்பில் லதாம் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக டீம் சௌதி தெரிவுசெய்யப்பட்டதுடன், டெஸ்ட் தொடரில் 2-0 என நியுஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றது.