நாட்டின் பல பாகங்களில் சில இடங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் அக்கரைப்பற்றில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 312 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, அட்டாளைச்சேனையில் 185.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் அம்பாறையில் 165 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.