சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு  நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ள குறித்த சந்திப்பில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் பெறக்கூடிய விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  உலகப் பொருளாதார மாநாட்டில் முடிவான  தீர்மானங்கள் பற்றி பிரதமர் விளக்கியுள்ளதோடு, நாட்டின்  எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய விடயங்களை இருவரும் ஆராய்ந்ததாக கூறப்படுகிறது.