தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியில் ஆணின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் இன்று மதியம் மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு அப்பால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியில் மிதந்து இருந்த நிலையில் தலவாக்கலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் கல்கந்த தோட்டத்தில் வசிக்கும் க.ரவீந்திரன் (வயது - 30) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளத்தை அவரின் உறவினர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளதாக விசாரணையை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டு மரண விசாரணைக்காக அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் உயிரிழந்தவர் கடந்த 19 திகதி வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.