தென்னாபிரிக்க அணிக்கிடையில் இடம்பெற்றுவரும் இருபதுக்கு - 20 தொடரின் பாதியில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் தனது குடும்பத்துடன் இருப்பதற்கான தேவையுள்ளதாக கோரிக்கை விடுத்து அனுப்பிவைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவரது கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது. 

இதையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மிகமுக்கியமானதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டியில் அணித் தலைவராக டினேஷ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்ககெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் இன்று நாடு திரும்பவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அவர்கள் இருவரும் காயத்தில் இருந்து குணமாக ஓய்வு தேவையுள்ளதால் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.