ஹொங்கொங்கில் நடை­பெற்ற ஆசிய கனிஷ்ட வலை­ப்பந்­தாட்ட வல்­லவர் போட்­டியில் சம்­பி­ய­னான இலங்கை கனிஷ்ட அணி­யி­ன­ருக்கும் இந்தியாவின் புனேயில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய அமைப்பு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பளு தூக்கும் போட்­டி­யிலும் பதக்­கங்கள் வென்­ற­வர்­க­ளுக்கும் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சினால் சன்­மானம் வழங்­கப்­பட்­டது.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சு கேட்­போர்­கூ­டத்தில் நேற்­று­முன்­தினம் பிற்­பகல் நடை­பெற்ற பாராட்டு விழா­வின்­போது விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர பரி­சு­களை வழங்­கினார்.

ஆசிய கனிஷ்ட வலைப்­பந்­தாட்டப் போட்­டியில் சம்­பி­ய­னான இலங்கை அணியில் இடம்­பெற்ற கயனி திசா­நா­யக்க (அணித் தலைவி)இ திசாலா அல்­கம (உதவி அணித் தலைவி)இ கயாஞ்­சலி அம­ர­வன்சஇ துலாங்கி வன்­னி­தி­லக்கஇ ருவினி யட்­டி­கம்­மனஇ ஹஷினி யோஷித்தாஇ தில்­ஷானி கப்ரால்இ ஜயத்ரி உப்­பேந்த்ரா அபே­சிங்கஇ நதி மது­ஷிக்கா பெர்­னாண்டோஇ சச்­சினி ஹிரு­ணிகாஇ ஹஷினி எரங்கா பெரேராஇ சேனானி பாலிக்கா ஆகி­யோ­ருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பணப்­ப­ரிசு வழங்­கப்­பட்­ட­தோடு அணியின் பயிற்­றுநர் தமா­ரா­வுக்கு மூன்று இலட்சம் ரூபா பணப்­ப­ரிசும் வழங்­கப்­பட்­டது.

இதே­வேளை பொது­ந­ல­வாய அமைப்பு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பளு தூக்கும் போட்­டியில் வெண்­கலப் பதக்­கங்­களை வென்ற கே. பலங்­க­சிங்க (225இ000 ரூபா)இ சீ. திசா­நா­யக்க (375இ000 ரூபா)இ எஸ். சந்த்­ர­தி­லக்க (225இ000 ரூபா)இ சத்­து­ரிக்கா பிரி­யன்தி (75இ000 ரூபா) ஆகியோருக்கும் பயிற்றுநர்களான டி. வன்ஷபுரஇ பி. விக்கிரமசிங்க ஆகி யோருக்கும் பணப்பரிசில்களை அமைச்சர் வழங்கினார்.