சொலமன் தீவில் 8.0 ரிக்ட்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : தென் பசுபிக் பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு  

Published By: Selva Loges

22 Jan, 2017 | 11:43 AM
image

தென் பசிபிக் பெருங்கடலில் 8.0 ரிக்ட்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்த குறித்த பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென் பசுபிக் பிராந்தியத்தின் பவ்கேயின்வில்லே தீவிற்கும், சொலமன் தீவின் பிரதான மையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 167 கிலோமீற்றர் ஆழமான பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிராந்திய புவியியல் ஆய்வுப்படி 8.0 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

குறித்த பிராந்தியங்களிலுள்ள இந்தோனேசியா, டோங்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நியூ கலிடோனியா பப்புவா நியூகினியா, வனுவாட்டு மற்றும் நவ்ரூ ஆகிய பகுதிகளில் 0.3 மீற்றர் உயரம் வரை சுனாமி அலை வீசுவதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிராந்தியங்களிகள் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டு சுனாமி அனர்த்த மையங்கள் தெரிவித்துள்ளன.

தென் பசுபிக் பிராந்தியம், பப்புவா நியூகினியா மற்றும் சொலமன் தீவு பகுதிகள் அடிக்கடி நிலநடுக்கத்திற்குட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52