போலி நாணயத்தாள்களுடன் ஐந்து பேர் யாழில் கைது

Published By: Raam

22 Jan, 2017 | 11:27 AM
image

யாழ்ப்­பாணம் நெல்­லி­யடிப் பகு­தி யில் கள்ள நோட்­டுக்­களை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் ஐந்து பேரை கைது செய்­துள்­ள­தாக நெல்­லி­யடி பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து 15ஆயிரம் ரூபா போலி நாண­யத்­தாள்­க­ளை யும் அதனை அச்­ச­டிக்கப் பயன்­ப­டுத்­திய கணனி போன்­ற­வற்­றையும் கைப்­பற்­றி­யுள்­ள­தா­க பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர். இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்று முன்­தினம் வல்­வெட்­டித்­து­றையை சேர்ந்த ஆறு பேர் நெல்­லி­ய­டியில் உள்ள மது­பான விடு­திக்கு மது அருந்த சென்­றுள்­ளனர்.  இவர்கள் மது­வ­ருந்தி முடிய பின்னர் அதற்­கான பணத்தை செலுத்­தி­யுள்­ளனர்.

குறித்த விடு­தியில் வாடிக்­கை­யா­ள­ரிடம் பணம் பெறும் போது அப் பணம் போலிப் பணமா இல்­லையா என்­பதை குறித்துப் பரி­சீ­லித்து பெற்­றுக்­கொள்­வது வழ­மை­யாகும் . அந்த வகையில் இப் பணமும் பரி­சீ­லிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது அவர்கள் வழங்­கிய நாண­யத்­தாள்கள் போலி­ய­னது என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் குறித்த மது­பான விடு­தி­யா­ளர்கள் உட­ன­டி­யாக நெல்­லி­யடி பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­ய­தை­ய­டுத்து குறித்த ஜந்து பேரையும் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் நெல்­லி­யடி பொலிஸார் கைது செய்­துள்­ளனர். அத்­துடன் அவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­னை­க­ளை­ய­டுத்து  அவர்­க­ளி­ட­மி­ருந்து 15ஆயிரம் ரூபா வரை­யான போலி­நா­ண­யத்­தாள்­க­ளையும் அதனை வடி­வ­மைக்க பயன்­ப­டுத்­திய கணணி போன்­ற­வற்­றையும்  கைப்­பற்­றி­யுள்­ளனர்.

மேலும் கைது செய்­யப்­பட்ட ஜந்து பேரையும் தவிர இவர்­க­ளுக்கு போலி­நா­ண­யத்­தா­ளினை விநி­யோகம் செய்­தவர் மற்றும் இவற்­றுக்கு சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர் என சந்­தே­கிக்­கப்­படும் ஒருவர் கொழும்பில் தல­ம­றை­வாகி இருப்­ப­தா­கவும் அவ­ரையும் கைது செய்­வ­தற்­கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.  கைது செய்யப்பட்ட ஜந்து சந்தேகநபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07