டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டுபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

இதன்போது 20ஆவது மாடியில் இருந்து திடீரென தீ  பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து விடுதியின் அனைத்து தளங்களுக்கும் தீ பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தீ விபத்து வானவேடிக்கையின் போது வெடித்த பட்டாசிலிருந்து வந்த தீப்பொறி பற்றி இருக்கலாம் என டுபாய் பொலிஸார் கருதுகின்றனர். தீ பற்றுவது குறித்து அறிந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளும் மூடப்பட்டன.

இந்த தீ விபத்தில் பலியானவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.