(எம்.நேசமணி)

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக பெற்றோர்களிடமிருந்து முப்பது இலட்சம் ரூபா பணத்தை,மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் கொழும்பிலுள்ள பிரதான தேசிய பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரை பொலிஸ் மோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

 கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை குறித்த பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்காக, அம்மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து 30 இலட்சம் ரூபா பணத்தினை குறித்த ஆசிரியர் மோசடியாக பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், சந்தேக நபரான  ஆசிரியர் 25 வருடங்களாக குறித்த பாடசாலையில் பணிபுரிந்து வருகிறார். எனவும் குறித்த மோசடியை பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலருடன் இணைந்தே செய்துள்ளார்.  மேலும் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களும்  மீட்கப்பட்டுள்ளன என்று கூறியதுடன்,

 மோசடி குறித்து பொலிஸ் மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் பிரேமரத்னவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே, சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.