ஜனாதிபதியால் புதிய ரக தேயிலை அறிமுகம் (படங்கள் இணைப்பு)

Published By: Ponmalar

21 Jan, 2017 | 04:21 PM
image

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்தே இந்த அறிமுக விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை தேயிலை பயிர் செய்கையின் 150 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் 92 வது ஆண்டு விழாவை முன்னிட்டே இவ்விழா முன்னெடுக்கப்பட்டது.

தேயிலை பயிர்செய்கையின் எதிர்காலம் கருத்திற்கொண்டு தேயிலைத்துறை தொடர்பில், புத்தகம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் 92 வருட வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும் நாட்டின் ஜனாதிபதியின் முதல் வருகையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வருகை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது அமைச்சர்களான அமைச்சர் நவின் திஸாநாயக்க, பழனி திகாம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08