முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு பிரதான அமைச்சர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு ஒன்றை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்க இந்தச் சந்திப்பு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்துவதோடு, மகிந்த ராஜபக்ச மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.