நீண்ட வறட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் மழைபெய்து வருகின்றது.இதனால் வறட்சிக்குட்பட்டிருந்த பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.இன்று 10.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் பெரும்போக வேளாண்மை பெருமளவில் சேதமடைந்துள்ளது.இம்முறை இம்மாவட்டத்தில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் இதில் பெருமளவிலான நெல்வயல்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று மழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் விவாசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.