ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் - போராட்டத்தை கைவிடவேண்டும் : தமிழக முதல்வர்

Published By: Robert

20 Jan, 2017 | 11:45 AM
image

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும், ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும், அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று தமிழகமுதல்வர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஜல்லிக்கட்டினை நடத்தவேண்டும் என்று கூறி தமிழகமெங்கும் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அமைதியான முறையில் அறவழியில் 5வது நாளாக போராடி வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று முன் தினம் டெல்லிக்கு சென்று, நேற்று பிரதமரைப் பார்த்து தமிழகத்தின் கோரிக்கைக்கு உதவுமாறு தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரதமர் மோடி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் உதவ இயலாது என்று கைவிரித்துவிட்டார். இதனால் உடனடியாக தமிழகத்திற்கு திரும்பாமல் டெல்லியிலேயே தங்கி சட்டநிபுணர்களுடனும், தமிழக அரசின் உயரதிகாரிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக முதல்வர். இதனைத் தொடர்ந்து இன்று காலையில் டெல்லியின் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். இது தொடர்பான  சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வரைவு அனுப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மேற்கொள்வர். மத்திய அரசின் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் மாநில  அளவில்திருத்தம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு  ஓரிருநாட்களில் நடைபெறும் என்பதால், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்”  என்று கேட்டுக் கொண்டார்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17