“சுதந்திரக் கிண்ணம்” ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுசெய்து வருகின்றது.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் “சுதந்திரக் கிண்ணம் ” என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது. 

இத் தொடர் குறிப்பாக  2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும்.

இத் தொடரில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.