சூரியவெவவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் முடிச்சுப் போடவேண்டாம் : திலங்க சுமதிபால

Published By: Priyatharshan

19 Jan, 2017 | 04:31 PM
image

அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்திற்கும் யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள சர்வவேதச கிரிக்கெட் மைதானத்திற்கும் முடிச்சுப்போடவேண்டாமென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கோட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பூரண ஒத்துழைப்புடனும் அனுசரணையுடனும் யாழ். மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறிப்பாக இலங்கையின் வடக்கு பிராந்தியங்களான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வன்னி, மன்னார் போன்ற பிரதேசங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக யாழ்ப்பாணம் திகழ்கின்றது. இதனால் தான் நாம் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியை கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உகந்த பிரதேசமாக தேர்ந்தெடுத்துள்ளோம். 

இத் திட்டம் நிறைவேறும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கையுள்ளது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் எவ்வாறு சாத்தியமானதோ அவ்வாறே யாழில் நிர்மாணிக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானமும் சாத்தியமாகும்.

அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரியவெவ கிரிக்கெட் மைதானம் எந்த அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டதென்பது தெரியாது ஆனால் யாழில் அமையவுள்ள சர்வதேச அரங்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஒத்துழைப்புடன் அமையவுள்ளது.

நாம் நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி மண்டைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானத்தை சாத்தியமுள்ளதாக்குவோம். 

அங்கு குறிப்பாக நீர் வசதியை ஏற்படுத்த வேண்டிய தேவையும் புற்களை வளர்ப்பதற்கான தேவையும் எமக்குள்ளது. ஏனனில் குறித்த பிரதேசத்தை சுற்றி கடல்நீர் உள்ளதால் எமக்கு இவ்வாறான தேவைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் சூரியவெவ மைதானத்தையும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கபடவுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாமென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59