தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பண்பாட்டு பவனியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் மலர்மாலை அணிவித்து அழைத்து விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இவ் விழாவில் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.