மோட்டார் வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளுக்கு நிறமூட்டல் அல்லது திரைச்சீலைகள் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தைப் பின்பற்றவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கு  நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது வாகன சாரதி மற்றும் வாகனத்தில் உள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது