உத்தரப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பேருந்து - ட்ரக் விபத்தொன்றில் 15 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் கடுங்குளிர் நிலவுவதால், அங்குள்ள பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. எனினும், எத்தா மாவட்டத்தில் உள்ள ஜேஎஸ் பொதுப் பாடசாலை திறக்கப்பட்டேயிருந்தது.

இதனால், அந்தப் பாடசாலையின் மாணவர்கள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டி ஏற்பட்டது.

இந்த நிலையில், குறித்த பாடசாலையின் மாணவர்களை வீட்டில் இருந்து ஏற்றி வந்த பாடசாலை வாகனம், அலிகஞ்ச் என்ற இடத்தில் எதிரே வந்த ட்ரக் வண்டியுடன் மோதியதில் கடுமையாகச் சிதைவடைந்தது.

விபத்தினால், இந்தப் பேருந்தில் இருந்த சிறுவர்களில் பதினைந்து பேர் உயிரிழந்தனர். மேலும் நாற்பது பேர் காயமடைந்துள்ளனர்.