ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள ஹொங்கொங் இருபது-20 பிலிட்ஸ் தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரரான திலகரட்ன டில்சான் விளையாடவுள்ளார்.

இந்த தொடரில் சிட்டி கைட்ஸ் அணிக்காக டில்சான் விளையாடவுள்ளார்.

இதேவேளை ஹொங்கொங் இருபது 20 பிலிட்ஸ் தொடரில் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார டெரன் சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்சான் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.