பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நாளைய தினம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில், தனது பதவிக்காலத்தின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பை தற்போதைய ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்று நடத்தினார்.

இதன் போது உரையாற்றுகையிலேயே ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனது பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவதில்லை.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தின்போது, அமெரிக்காவின் அடிப்படை நெறிமுறைகள் பாதிக்கப்படுவதாகத் தாம் உணர்ந்தால் அதற்காக எதிர்த்துக் குரல் கொடுக்க தயாராக இருப்பேன்.

நாளைய பதவி மாற்றத்துக்குப் பின்னர் எனது நேரத்தைப் பிள்ளைகளுடன் செலவிட விரும்புகின்றேன். அத்துடன் எழுதுவதற்கும் நான் கவனம் செலுத்தவுள்ளேன்.

 இதேவேளை, எதிர்காலத்தில் அமைதியாக நேரத்தைச் செலவிட எதிர்பார்த்துள்ளேன்

இந்நிலையில் நாளைய தினம் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். குறித்த பதிவி மாற்றம் மிகவும் சுமுகமாக இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.