பாரம்பரிய விழாவில் குதிரைகளை மிரட்டும் ஸ்பானியர்கள். ஸ்பெயினின் சென் பார்தலாமே டீ பின்ரெஸ் எனும் கிராமத்தில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய விழாவில் குதிரைகளை நெருப்பு சுவாலை மீது பாயவிடும் வினோத திருவிழா பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சுமார் 500 வருடங்கள் பழமையான லாஸ் லுமினாரியாஸ் எனும் வெளிச்ச திருவிழாவில், பெட்ரோலால் எரியூட்டப்பட்ட  நெருப்பு சுவாலை மீது குதிரைகளையும், கழுதைகளையும் பாயவிடும் சம்பவம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

சுற்றி அடைக்கப்பட்ட நிலையில் எரியும் நெருப்பை பாய்ந்து கடப்பதற்கு குதிரை மீதுள்ள வீரர்கள், அதை பலவந்தப்படுத்தி நெருப்பு சுவாலையை கடக்கச்செய்கின்றனர். இதனால் கிராமத்திற்கும், விலங்குகளுக்கும் தீய சக்தியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளார்களாம்.    

குறித்த திருவிழா தலைநகர் மேட்ரிட்லிருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள கிராமத்தில், சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ரோமன் கத்தோலிக்க மதம் சார்ந்த குளிர்கால பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இருப்பினும் குறித்த திருவிழாவில் விலங்கு வதை இடம்பெறுவதாக கூறி, பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது விமர்சனத்தையும்,எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.