இந்தியாவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்றும் லண்டனை சுற்றிப்பார்க்க  பயணித்தையறிந்த விமானி விமானத்தை மீண்டும் மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார்.

நேற்று வழக்கம்போல அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து காலை 7 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற குறித்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் பயணம் செய்தனர். 

குறித்த விமானம், ஈரான் நாட்டின் தெஹ்ரான் வான் பிரதேசத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையைச் சுற்றி ஒரு எலி ஓடிக்கொண்டிருந்ததை அவாபணித்த சிப்பந்தி உடனே விமானிக்கு தகவல் கொடுத்தார். 

இதையறிந்து பதற்றம் அடைந்த விமானி, உடனடியாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்து மீண்டும் அந்த விமானத்தை மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார்.

அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை ஒதுக்குப்புறமாக கொண்டு சென்று அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது.பின்னர் மாற்று விமானம் மூலம் பயணிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.